யாழில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக கண்டனப் போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2019 (புதன்கிழமை)
வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் ஐனாதிபதி மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.
அத்துடன் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்று இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.