கரப்பந்து சுற்றுப்போட்டியின் அரையிறுதியாட்டங்கள் வெள்ளிக்கிழமை அன்றும், இறுதியாட்டங்கள் மற்றும் மூன்றாமிடத்திற்கான ஆட்டங்கள் ஞாயிற்றுக் கிழமை அன்றும் வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
முதலாவது அரையிறுதிப்போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.