பருத்தித்துறைபிரதேச செயலக அணிகளிற்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான எல்லே போட்டியானது 09.03.2019 அன்று அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதியாட்டத்தில் வல்வை அணியினரை எதிர்த்து பருத்தித்துறை யுனைட்டட் அணியானது மோதியது. இரண்டு இனிஸ்களை கொண்டதாக அமைந்த ஆட்டத்தில் நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற யுனைட்டட் அணியானது துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய யுனைட்டட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 30 பந்துகள் முடிவில் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வல்வை அணியினர் 30 பந்துகள் முடிவில்3 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 2 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இனிங்ஸில் களமிறங்கிய யுனைட்டட் அணியானது 30 பந்துகள் முடிவில் 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முதல் இனிங்ஸில் யுனைட்டட் அணியின் முன்னிலையால் வல்வை அணிக்கு 9 ஓட்டங்கள் வெற்றியிலக்காக வழங்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய வல்வை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 30 பந்துகள் நிறைவில் 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெற்றிவாய்ப்பினை நழுவ விட்டு இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.