அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார்.
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை தேர்வுசெய்யும் தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டு அணித் தேர்வுக்காக கடந்த 3 ஆம் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் Sub-Junior பிரிவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் திருச்சி SRM அணிசார்பில் கலந்துகொண்ட சிறுமி தனுஜா ஜெயக்குமார் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கான அணியில் தேர்வாகியுள்ளார்.
100 மீட்டர் Freestyle பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 1:18.69 நேரத்திலும், 50 மீட்டர் Back Stroke பிரிவில் குறித்த தூரத்தை 0:41.90 நேரத்திலும் கடந்து இரண்டாவதாக வந்து இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும், 50 மீட்டர் Freestyle பிரிவில் குறித்த தூரத்தை 0:34.66 நேரத்தில் கடந்து மூன்றாவதாக வந்து வெண்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டு அணி சார்பிலான Sub-Junior பிரிவில் 50 மீட்டர் Back Stroke, 100 மீட்டர் Freestyle ஆகிய தனிநபர் பிரிவு நீச்சல் போட்டிகளுக்கும் 50x4 மீட்டர் Freestyle தொடர்நீச்சல் பிரிவு போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளார் தனுஜா.
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டு தற்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் சிறுமி தனுஜா தனது அபார நீச்சல் திறமையினாலும் கடுமையான பயிற்சியினாலும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டிகள் இம்மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கூடாக தன் மகளை ஒரு உன்னதமான நிலைக்கு வளர்த்துவரும் தந்தையையும் ஒரு கணம் வாழ்த்துவோம்.
இந்திய தேசிய நீச்சலில் வல்வையை பூர்வீகமாக கொண்ட தனுஜா தெரிவு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.