லண்டனில் YOUNG WRITERS 2017 இல் வல்வை சிறார்களும் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2018 (வியாழக்கிழமை)
லண்டன் - மிச்சம் (MITCHAM) நகரில் உள்ள CRANMER PRIMARY பாடசாலையில் நம்மவர்களின் சிறார்கள் பலபேரும் கல்வி கற்று வருகின்றார்கள்.
அண்மையில் 16 பாடசாலைகளின் பலநூறு மாணவர்கள் கலந்து கொண்ட “YOUNG WRITERS 2017” எனும் ஒரு போட்டி நிகழ்வினில் நம் குழந்தைகளும் பங்கு கொண்டு “TELENT FOR WRITING” எனும் திறமைச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். சான்றிதழ் பெற்ற 5 மாணவர்களுள் 8 வயதினனான மதிவதனன் அபிநாஷ் எழுதிய கவிதையே இங்கு காண்கிறீர்கள்.
Quess Me?
I am creative but I’m in
M ost of your brains
A lso deadly, vicious, pleasant and joyful
G reat
I magination
N o other imagination as yours
A mazing nights…
T ough nights…
I sometimes make you scream
O ther nights you ‘ll love me
N ow can you guess who I am?
வெற்றியாளர்களின் அனைவரது ஆக்கங்கள் “ONCE UPON DREAM” எனும் தலைப்புக் கொண்ட புத்தகமாக “JACKSON SMITH” என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது. 16 பாடசாலைகளைச் சேர்ந்த 167 மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கியுள்ள புத்தகத்தில் சிறுவன் அபிநாஷின் கவிதை 23ம் பக்கத்தில் உள்ளது. YOUNG WRITERS 2017 விருது பெற்ற நமது ஊர் இளைய தலைமுறையினரான
அபிநாஷ் மதிவதனன்
நிகிதா உமாசேகரன்
ஜெய்பிரகவி ஜெயகாந்தன்
ரோஸ்வினி இளங்குமரன்
ஆகர்ஷனா ஆனந்த்
ஆகிய மாணவ மாணவியரை நாமும் பாராட்டி வாழ்த்துகிறோம். அனைவருக்கும் எமது நல்லாசிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.