மஹேசன் வி.க கிரிக்கெட் - அரையிறுதிக்கு நெடியகாடு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2017 (திங்கட்கிழமை)
மஹேசன் விளையாட்டுக்கழகம் நடத்தும் அணிக்கு 8 நபர் 6 பந்துப்பபரிமாற்றம் கொண்ட கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று கழத்தடுப்பை தெரிவு செய்தது கொலின்ஸ் அணி. அதற்கமைய துடுப்பெடுத்தாடிய நெடியகாடு அணி 5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 35 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் சுகந்தன் 9, சஞ்சீவன் 8, சிலம்பு 14 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.
பதிலளித்த கொலின்ஸ் அணி 19 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பந்துவீச்சில் சிலம்பு 4, கிருபா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் முடிவில் கொலின்ஸ் அணியை 16 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நெடியகாடு அணி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.