கரவெட்டி மத்தொணி வி.க கிரிக்கெட் - வல்வை அணி சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2022 (திங்கட்கிழமை)
கரவெட்டி மத்தொணி விளையாட்டுக்கழகம் நடாத்திய அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையிலான 9 நபர் 6 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமானது நேற்றய தினம் கரவெட்டி மத்தொணி விளையாட்டக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதியாட்டத்தில் கரவெட்டி மகேசன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகமானது மோதியது.
நாணயற்சுழற்சியில் வெற்றிபெற்ற வல்வை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி,பிரகதீஸ்வரன் மற்றும் கபிலன் ஆகியோரின் அதிரடியினால் நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை வெற்றுக்கொண்டது.. வல்வை அணிசார்பாக துடுப்பாட்டத்தில் பிரகதீஸ்வரன் 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களையும், கபிலன் 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
77 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய கரவெட்டி மகேசன் அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, வல்வை அணியானது 6 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தினை தனதாக்கியது.
பந்துவீச்சில் வல்வை அணிசார்பாக அபாரமாக பந்து வீசிய, நவீன் 1 ஓட்டத்தினை மாத்திரம் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினையும், பிரகதீஸ்வரன் 8 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறையிலும் ஜொலித்த பிரகதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.