வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக, அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன், சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன இன்று மாலை இடம்பெற்றன.
நேற்றைய இறுதி ஆட்டங்களில்
பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில், சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக் கழகம் மோதியதில், உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
35 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில், ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியதில், தீருவில் விளையாட்டுக் கழகம் 7 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்றைய இறுதி ஆட்டங்களில்
மென்பந்தாட்ட கிரிக்கெட் இறுதியாட்டத்தில், சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து றெயின்போ விளையாட்டுக் கழகம் மோதியதில், றெயின்போ விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக் கழகம் மோதியதில், ரேவடி விளையாட்டுக் கழகம் 1 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் என்பன வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பித்து இடம்பெற்றன.
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக இறுதிப்போட்டிகள், பரிசளிப்பு இடம்பெற்றது
Valvai Shinnings sports club Vaithilingam memorial sports events & Prize giving ceremony
heldhttp://www.valvettithurai.org/vaithilingam-memorial-sports-events-and-prize-giving-ceremony-held-9551.html pic.twitter.com/IKNThPZcEv
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.