தீபாவளிப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என ஜ.நா.சபை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அந்தப் பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஜ.நா.சபை முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஜ.நா.சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜ.நா.வின் தபால் தலை நிர்வாகப்பிரிவு, தீபாவளிப் பண்டிகைக்காக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. நீயூயோர்க்கில் (ஜ.நா.தலைமை அலுவலகம்) ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரு தாளில் 10 சிறப்பு தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டொலர். அந்த சிறப்பு தபால் தலையில் அகல் விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும். இதன் பின்னணியில் ஜ.நா தலைமை அலுவலக கட்டிடமும் "மகிழ்ச்சியான தீபாவளி" வாழ்த்தும் இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.