இன்னும் 24 மணி நேரத்தில் புயலாகி மாறி ஆந்திராவைக் கடக்கவுள்ள தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2016 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) நேற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுவடைந்து தொடர்ந்து வடக்குத் திசையில் மணிக்கு 6 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
இலங்கை நேரம் இன்று அதி காலை 3 மணிக்கு அகலாங்கு 11 வடக்கு, நெட்டாங்கு 92 கிழக்கு என்னும் புள்ளியில் (பருத்தித்துறைக்கு கிழக்கு வட கிழக்காக சுமார் 750 கடல் மைல்கள் தொலைவில்) நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் எதிர்வரும் 24 மணி நேரத்தில் புயலாக (Cyclonic storm) மாறி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி காலை தாக்கவுள்ளது.
குறித்த இந்த புயல் இந்த வருடத்தில் இந்தப் பகுதியில் ஏற்படும் 5 ஆவது புயலாகும், இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
குறித்த புயலால் யாழ் குடாநாட்டுக்கு எதுவித நேரடிப் பாதிப்புக்களும் உண்டாக வாய்ப்பில்லை.
கீழே படத்தில் குறித்த புயலின் ஆரம்ப மற்றும் எதிர்பார்க்கப்படும் பாதை காடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.