வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக கடந்த 3 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் ஆனது தற்பொழுது தீவிரமடைந்து (Tropical Cyclone) வடக்குத் திசையில் பங்களாதேசத்தின் சிற்றாக்கோங் துறைமுகம் நோக்கி நகர்ந்து வருகின்றது.
இன்று காலை இலங்கை நேரம் 0001 மணியளவில் அகலாங்கு 1 4 வடக்கு மற்றும் நெட்டாங்கு 88.5 எனும் புள்ளியில் மணிக்கு 4 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. குறித்த பகுதியைச் சுற்றி காற்று மணிக்கு 32 கடல் மைல்கள் வேகத்தில் வீசி வருகின்றது.
வங்காள விரிகுடா பகுதியில் வருடந்தோறும் மே மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை சூறாவளி காலம் என்பதுடன் இந்த வருடம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது தாழமுக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தாழமுக்கத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை, ஆனாலும் தாழமுக்கம் என உறுதிப் படுத்தப்பட்டுள்ளமையால் தற்காலிகமாக இலக்கம் 2 கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாழமுக்கத்தால் யாழ் தீபகற்பத்திற்கு நேரடிப் பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்றாலும், கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் கடலும் கொந்தளிப்பாக இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
கீழே படத்தில் தாழமுக்கம் நகரும் பாதை மற்றும் தழமுக்கத்தின் செய்மதிப் படங்கள் காட்டப்பட்டுள்ளன காட்டப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்
1) பருத்தித்துறைக்கு வட கிழக்காக வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.