நேற்று நாடு முழுவதும் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், வல்வெட்டித்துறை நகரசபையில் ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்றிருக்காத நிலையில், இங்கு இரண்டு கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது.
பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்னணியில் உள்ளதாலும், தமிழரசுக் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளதாலும், வல்வையிலும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தமிழரசுக் கட்சி முதலாவது இடத்தில் உள்ளதாலும், இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து வல்வை நகரசபை உட்பட்ட நான்கு சபைகளிலும் ஆட்சி அமைக்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது. அல்லது வல்வையில் சுயேட்சையுடன் சேர்ந்து கூட்டமைப்பு ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.