வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதுகுட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணியை எதிர்த்து வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை அணி மோதியது. இதில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி 25:22, 25:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. 3 வது இடத்தை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி பெற்றுக் கொண்டது.
16 வயதுகுட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணியை எதிர்த்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி மோதியது. 1 வது செற்றில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 26:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதும் அடுத்த இரண்டு செற்களிலும் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி 25:22, 25:16, என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. 3 ஆம் இடத்தை இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி பெற்றுக் கொண்டது.
20 வயதுகுட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணியை எதிர்த்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி மோதியது. இதில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி 25:12, 25:20 என்ற புள்ளிகள் என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. 3 வது இடத்தை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அணி பெற்றுக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.