தொண்டைமானாறு ஏரி - உல்லாசப் படகுச் சேவைக்கு யாழில் மிகவும் சிறந்த இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2014 (வியாழக்கிழமை)
படத்தில் காட்டப்பட்டுள்ளது தொண்டைமானாறு ஏரியாகும். இது இலங்கையின் நீண்ட கடல் நீரேரியான தொண்டைமானாறு - சுண்டிக்குளம் பகுதியின் ஒரு பகுதியாகும். இது தொண்டைமானாறு புதிய பாலம் மற்றும் செல்வசந்நிதி முருகன் ஆலயத்தையொட்டி அமைந்துள்ள நீர்த்தடுப்பு அணை என்பவற்றை இருபுறத்தே கொண்டு அமைந்துள்ளதுடன், ஒரு புறத்தே பசுமையான மரங்களையும் மறு புறத்தே செல்வசந்நிதி முருகன் ஆலய ஆற்றங்கரை வீதியையும் கொண்டுள்ளது.
சுமார் 2,70,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள பாதகமற்ற நீர் நிலையை இது கொண்டுள்ளதால் யாழ்பாணத்தில் உல்லாசப் படகுச் சேவைக்கு மிகவும் உகந்ததாகவுள்ளது. ஆனாலும் உள்ளூர் வாசிகளாலோ அல்லது நகர மற்றும் பிரதேசசபைகளால் பெரிதாக அலட்டிக் கொள்ளப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.