தொண்டைமானாறு கலைவாணி உதைப்பந்து - பொம்மர்ஸ், யங்கபம்ன்ஸ் அரையிறுதிக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2015 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் யாழ் மாவட்ட ரீதியான 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் லீக் போட்டியின் வரிசையின் நேற்றைய போட்டியின் (24/07/2015) முதல் ஆட்டத்தில் கம்பர்மலை யங்கபம்ன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் மோதியது.
இதில் யங்கபம்ன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்று அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
கம்பர்மலை யங்கம்பன்ஸ் அபார வெற்றி
இப் போட்டியில் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதிய கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். யங்கம்பன்ஸ் சார்பாக ரதன்-4 பிரகாஸ்-1 தர்சன்-1 கோல்களையும் போட்டனர்.
இச் சுற்றுப்போட்டியின் லீக் ஆட்டத்தில் யங்கம்பன்ஸ் அணி பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரைஇறுதி போட்டியில் யங்கம்பன்ஸ் அணி விண்மீன் அணி எதிர்த்து மோதவுள்ளது
இரண்டாவது போட்டியில் நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பொர்மஸ் விளையாட்டுக் கழகத்தை மோதியது . இதில் பொர்மஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று 04 புள்ளிகளைப் பெற்று அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இன்றைய ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பருத்தித்துறை லீக் தலைவர் நவநீதமணி மற்றும் நவநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.