திக்கம் இளைஞர் வி.கழக உதைப்பந்து - கழுகுகள் வி.கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2014 (புதன்கிழமை)
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் 11 நபர்கள் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தற்பொழுது திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன் வரிசையில் கடந்த சனிக்கிழமை வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவெட்டி செஞ்சுடர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் போடுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்த போது கோல் எதனையும் பெறாத நிலையில் நடுவர்களால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.