இந்த அலுவலகம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இன்று காலை யாழ்மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது இங்கு பணியாற்றுவதற்காக நான்கு பேருக்கான நியமனக்கடிதங்களையும் அமைச்சர் வழங்கினார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் உதவிகள் புலம்பெயர் பணியாளர்களின் இழப்பீடுகள் நாடு திரும்பியோருக்கான உதவிகள் போன்ற சேவைகளை இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமாத்திரமன்றி வெளிநாட்டு தேவைகளுக்கான பிறப்பு இறப்பு கல்விச்சான்றிதழ் என்பன இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா பாதுகாப்பு செயலாளர் கருணாரட்ன ஹெட்டிஆராச்சி மற்றும் முப்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.