தாய், தகப்பன், மகன், மகள் - எல்லோரும் விமானிகளாக பறக்கும் குடும்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
தாய், தகப்பன், மகன், மகள் என முழுக் குடும்பமே விமானத்தில் விமானிகளாக (Pilots) வலம் வருகின்றார்கள். Captain Jai Dev Bhasin 1954 இல் இந்தியாவில் உருவான 7 கமாண்டர்களில் ஒருவர். பின்னாளில் இவரின் மகன் Captain Rohit Bhasin மற்றும் மருமகள் Niveditha Jain குடும்பத்தில் விமானிகளாக உருவெடுத்தார்கள்.
பெற்றோர்களைத் தொடர்ந்து மகன் Rohan Bhasin மற்றும் மகள் Niharika Bhasi ஆகிய இருவரும் விமானிகளாக பறந்து வருகின்றனர்.
தாய் Niveditha தனது 20 வயதில் Indian Airlines இல் June 24 1984 தனது முதலாவது பறப்பினை மேற்கொண்டார். இவர் தனது 26 ஆவது வயதில் Boeing 737 இல் commander ஆக பொறுப்பேற்ற பொழுது, அப்பொழுது உலகில் இந்த வகை விமானத்தை செலுத்தியிருந்த மிகவும் இளம் வயதினர் ஆக சாதனை படைத்திருந்தார். இவரின் இன்னொரு சாதனை, முதன் முதலாக முழுக்க பெண் பணியாளர்கள் (All women crew) Airbus 300 ஒன்றில் துணை விமானியாக பணியேற்றிருந்தமை.
மகள் Niharika Bhasi அண்மையில் Airbus A 320 இல் விமானியாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மகன் Rohan Bhasin, Boeing 777 இல் தற்பொழுது விமானியாக உள்ளார். தகப்பனும் மகனும் இதுவரை 10 தடவைகள் ஒன்றாக விமானத்தைச் செலுத்தியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
மாதத்தில் வெறும் 5, 6 நாட்களே குடும்பமே ஒன்றாகச் சந்திக்கும் இவர்கள், கூடுதலான நாட்கள் ஆகாயத்திலே ஒருவருக்கு ஒருவர் கை அசைக்கின்றனர்.
நிலத்திலும் பார்க்க ஆகாயத்திலேயே அதிகம் சந்திக்கும் குடும்பம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.