பாலியல் ரீதியான அச்சுறுத்தலை வெளிக்கொணரும் குறும்படம் " வினவு"
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)
வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் (Ministry of Health Northern Provincial Council) அனுசரணையில், 'VINO CREATIONS' தேவராஜ்,வினோத் தயாரிப்பில் ஜெ . வினோத் அவரின் இயக்கத்தில் ஈழத்தில் வெளிவந்திருக்கும் குறும் படம் " வினவு" .
அண்மை காலங்களில் வடக்கில் சற்று கூடுதலாக நிகழும் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் , துன்புறுத்தல் என்பனவற்றைத் மையக்கருவாக எடுத்து இந்த வினவு எம்மில் பல வினாக்களை எழுப்புகிறது. வறுமையின் காரணமாக பனிப்பெண்ணாக வேலைக்கு செல்லும் அக்கா பாத்திரம் சந்திக்கும் கசப்பான அனுபவங்கள் காட்சி அமைப்பில் சிறப்பாக உள்ளது.
மேலும் முடியாத அம்மா , தங்கையின் ஏக்கம் , அக்காவின் இயல்பான நடிப்பு எமக்கும் கண்ணீர் வரவைத்து கலங்கடிக்குறது . பாடம் புகட்டும் ஆசான் தவறிழைக் முற்படுவது முற்களே கிழித்து ரோஜா போல் அவரின் உண்மை முகத்தை எடுத்து காட்டுகிறது .
படத்தின் ஒளிப்பதிவு சிவராஜ் மிக நேர்த்தியாக அவரின் அனுபவம் காட்சிகளை காட்டும் விதத்தில் தெரிகிறது . ஒளிதொகுப்பு வினோதன் குறுகிய நேரத்தில் அழகாக ரசிக்க வைக்குறது . இசை பத்மயன் படத்தை மிக வலுவாக தாங்கி செல்கிறது . இயக்கம் வினோத் படத்தின் இறுதியில் மாணவன் கேட்கும் நச் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிக்கும் இடத்தில் அவர் நமக்கு பல செய்திகளை சொல்லாமல் சொல்லி செல்வது சிறப்பு .
இறுதியில் சிறுவர்கள், பருவமடைந்த பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுதல் , ஆபாச காட்சிகளை காண்பித்தல், அவர்களை தொடு்தல், தடவுதல், தவறான எண்ணங்கள் தூண்டுதல் , உட்படுத்தல் இவை அனைத்தும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் ஆகும் என்ற வாசகத்தோடு நிறைவு பெறுகிறது.
மொத்தத்தில் " வினவு" சமூகத்தில் பல வினாக்களை எழுப்பி காலத்தின் பதிவாக சிறப்பாக வந்து வெற்றி பெற்றுள்ளது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.