கனடாவில் இடம்பெற்ற தமிழர் தெருவிழா, கனேடிய பிரதமரும் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2017 (புதன்கிழமை)
கனடா ரொரன்டோ மாநகரில் இந்தவார இறுதி விடுமுறைநாளில் 26 -08 -2017, 27 -08 -2017 (சனி, ஞாயிறு) இடம்பெற்ற தமிழர் தெருவிழாவிலும், 10- 09- 2017ஆம் நாள் தென்னமரவாடிக் கிராமத்தின் மீள்குடியேற்றத்திற்காக ஸ்காபரோ தொம்சன் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒரு லட்சம் கனடியடாலர்கள் சேர்க்கும் நிதிசேர் நடையிலும் கலந்து கொள்வதற்காகவும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மாவைசேனாதிராஜா அவர்களும், கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் திரு.கி.துரைராஜசிங்கம் அவர்களும் வடமாகாணசபை உறுப்பினர் திரு.ஆர்னோல்ட் இமானுவேல் அவர்களும் கனடா வந்துள்ளனர்.
இவர்கள் இரண்டுவாரம் கனடாவில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். சென்ற வருடம் நிதிசேர் நடையில் சேகரித்த நன்கொடை மூலம் சம்பூரில் மீள்குடியேற்றத்திற்காக 40 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.
26ம் திகதி சனிக்கிழமை தமிழர் தெருவிழாவை திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பா.உ ஹரி.ஆனந்தசங்கரி, ரொறன்டோ மேயர் ஜோன் டெரி, திரு.நீதன் ஷான் ஆகியோர் சிற்றுரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து நடன நிகழ்வுகளும் சிலம்படி என்பன இடம்பெற்றன. இரண்டு நாட்களும் நடந்த இரவு நிகழ்வில் பல ஆயிரம் மக்கள் மத்தியில் திரு.சேனாதிராஜா, திரு.துரைராஜசிங்கம், திரு.ஆனோல்ட் அவர்களும் உரையாற்றினர்.
பல வர்த்தகச் சாவடிகளும் இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகளை கனடிய மக்கள் பேரவை, தமிழரசுக்கட்சி கனடாக்கிளையும், திருகோணமலை நலன்புரிச்சங்கம் ஆகியன இணைந்து நடத்துகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.