வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் வரிசையில் கடல் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது.
கடல் விளையாட்டுக்களின் ஒரு அங்கமாக நீச்சல் போட்டி 2 பிரிவுகளாக இடம்பெற்றது. 21 வயதிற்கு மேற்பட்டோருக்கான நீச்சல் போட்டி வல்வை ஊரணியிலிருந்து ரேவடி கடற்கரை வரை இடம்பெற்றது.
போட்டியின் முடிவில் 7 வீரர்கள் முடிவு இடத்தை வந்தடைந்தனர். இவர்களில் முதலாவதாக வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த 62 வயதுடைய திரு.பாலேஸ்வரன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
1 ஆம் இடம் T - பாலேஸ்வரன் (உதயசூரியன் விளையாட்டுக்கழகம்)
2 ஆம் இடம் யு.உதயசீலன் (ரேவடி விளையாட்டுக்கழகம்)
3 ஆம் இடம் S.ராஜ்குமார் (ரெயின்போ விளையாட்டுக்கழகம்)
4 ஆம் இடம் K.ரவிச்சந்திரன் (சைனின்ஸ் விளையாட்டுக்கழகம்)
5 ஆம் இடம் ஆ.தீபன் (ரெயின்போ விளையாட்டுக்கழகம்)
6 ஆம் இடம் த.கிருஷ்ண (ரெயின்போ விளையாட்டுக்கழகம்)
7 ஆம் இடம் உலகராசா (ரேவடி விளையாட்டுக்கழகம்)
கீழே படத்தில் போட்டியில் நீந்தி முடித்த நீச்சல் வீரர்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.