பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அதிகபட்ச கட்டணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2021 (வியாழக்கிழமை)
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் (PCR) மற்றும் ஆன்டிஜென் (Antigen test) பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலானது, நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட உள்ளது.
இதன்படி, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக ரூபா 6,500 மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக ரூபா .2,000 கட்டணம் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.