இலங்கையில் மிகவும் பிரசித்தி மற்றும் தேவர புகழ் பெற்ற சிவன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கடந்த மூன்று தினங்களாக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.
மூர்த்தி தலம் தீர்த்தம் இம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவன் ஆலயமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி இன்றுடன்
முடிவடையவுள்ளது. எண்ணைக்காப்பு நிகழ்வானது காலை ஆரம்பமாகி இரவு பத்து மணிவரை நீடித்திருப்பதுடன், ஏராளமான பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் எண்ணைக்காப்பு சாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.