கடலில் தாண்ட கப்பல் Sewol கொரியாவில் நிலத்திற்கு கொண்டுவரப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2017 (வெள்ளிக்கிழமை)
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி 476 பயணிகளுடன் கொரியாவின் துறைமுக நகரான இஞ்சோனிலிருந்து (Incheon) கொரியாவின் உல்லாசபுரி தீவு என அழைக்கப்படும் ஜேஜூ (Jeju) இற்கு பயணித்திருந்த பயணிகள் கப்பலான 'Sewol', இடைவழியில் ஒருபக்கம் சாய்ந்து பகுதியாகக் கவிழ்ந்ததில் பலர் மரணமானார்கள்.
இவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் (Secondary school students, Danwon High School). இதனால் இந்த விடயம் வழமைக்கும் அதிகமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவலாகப்பேசப்பட்டிருந்தது.
உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அழுத்தம் காரணமாக தாண்ட கப்பலை நிலத்திற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2 வாரம் முன்பு கடலின் மேற்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட கப்பல், Module Transporters களின் உதவியுடன் கடந்த 10 ஆம் திகதி மொக்போ (Mokpo) என்னும் துறைமுகத்தின் நிலப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்காக கப்பலின் பெறுமதியைவிட பல மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கப்பலின் துருசு அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர், 20 பேர் அடங்கிய சோதனையாளர்கள் கப்பலில் காணாமல் போன 9 பேர் பற்றி தேடுதல் மேற்கொள்ளவுள்ளனர் என Korea Herald செய்தி வெளியிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.