கெருடாவில் எரிந்த வீட்டின் குடும்பத்திற்கு நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)
பருத்தித்தறை பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாயவன் கோவிலடியில் வசிக்கும் செல்வன் ஆனந்தநாதன் குடும்பத்தினர் வசித்து வந்த குடிசை கடந்த 07.08.2017 அன்று சமையலில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக தீப்பிடித்ததன் காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளது. அக்குடும்பம் தொடர்ந்து அதில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
08 மாதக் கைக்குழந்தையுடன் வசித்துவரும் குடும்பம் குடிசை தீக்கிரையான நிலையில் புகலிடம் இன்றி அல்லல்பட்டுகொண்டிருந்தனர். அவர்களின் நிலமையை உணர்ந்து உடனடியாக தற்காலிக குடிசை அமைப்பதற்காக ரூபா 15000 தொகையினை சிவன் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.
குறித்த நிதியுதவியினை கிராம அபிவிருத்தி சங்க செயலாளரின் ஊடாக சிவன் அறக்கட்டளையின்(sivan foundation) ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதமும் அதன் இணைப்பாளர் திரு.சதீஸ் அவர்களும் கையளித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.