சிதம்பர உட்பட 4 பாடசாலைகளில் க.பொ.த (உ/த) தொழில் நுட்பபிரிவை ஆரம்பிக்க சிவாஜிலிங்கம் நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் மற்றும் தேவைரையாளி இந்துக் கல்லூரி ஆகிய 4 பாடசாலைகளில் க.பொ.த (உ/த) தொழில் நுட்பபிரிவை ஆரம்பிக்க வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு திரு.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, கடந்த மாதம் 10 ஆம் திகதி வலயக் கல்விப் பணிப்பாளரினால் வட மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
க.பொ.த (உ/த) தொழில் நுட்பபிரிவானது வடமராட்சியில் தற்பொழுது பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே தகுந்த வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.