வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்திற்கு ரூபா 1 லட்சம் நிதியுதவியினை தனது இந்த வருட (2017) மாகாண சபை நிதியிலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் ஒதுக்கியுள்ளார்.
குறித்த நிதி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவிற்கு பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் 2018 ஆம் ஆண்டு மாகாணசபை உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாவினை ஆதிசக்தி சனசமூக நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு தான் ஒதுக்கவுள்ளதாக, ஆதிசக்தி முன்பள்ளியில் கடந்த வியஜதசமி அன்று இடம்பெற்ற வாணி விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.