ட்ரோனை பயன்படுத்தி வான்பார்வை படப்பிடிப்பை மேற்கொண்ட கப்பல் தடுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)
ட்ரோன் (Drone) எனப்படும் வானிலிருந்து படப்பிடிப்பை (Arial Photography) மேற்கொள்ளவல்ல கருவியைக்கொண்டு சுயஸ் கால்வாய் வழி பயணம் மேற்கொண்ட கப்பலை படம் பிடித்ததற்காக குறித்த கப்பலை சுயஸ் கால்வாய் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
ட்ரோனை இயக்கிய சிறிது நேரத்திலயே குறித்த கப்பலின் கப்டன், கப்பலை நங்கூரமிடுமாறு சுயஸ் கால்வாய் அதிகாரிகளால் (Suez Canal Authority - SCA) பணிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் பின்னர், Drone மற்றும் அதற்குள் இருந்த Memory Card என்பன பறிமுதல் செய்யப்பட்டதுடன், கப்பல் மேலதிக விசாரணைகளுக்காக எகிப்திய அதிகாரிகளால் தடுக்கப்பட்டது.
தற்பொழுது Drone ஐப் பாவிப்பது சம்பந்தமாக எதுவித பொதுவான விதிகளோ அல்லது சர்வதேச விதிகளோ இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
Drone கள் தற்பொழுதுபல்வேறு கடல் சார் வேலைத்திட்டங்களில் (Maritime industry) பாவிக்கப்படுகின்றது. அபுதாபி துறைமுகங்கள் (Abu Dhabi Ports) தனது துறைமுகத்தின் பாது காப்பை அதிகரிக்க டிரோன் கமராக்களைச் (drone cameras) சேர்த்துள்ளன. உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான Maersk தனது முதலாவது ட்ரோனை கப்பல் ஒன்றுக்கு அளித்துள்ளது. DNV GL எனப்படும் கப்பல்களை சோதனை செய்யும் நிறுவனம் ஒன்று டிரோன்களைப் பயன்படுத்தி தனது முதலாவது சோதனை ஒன்றையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் கப்பல் ஒன்றில் டிரோன் பயன்படுத்தப்பட்டு காட்சி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.