வடக்கில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)
நாட்டின் ஊடாக குறிப்பாக மத்திய மலைநாட்டிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு ,வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பில் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசங்களிலும் வீசும் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும் மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும் என்றும் அனுராதபுரம் , யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஓரளவு மழைபெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ,கொழும்பு ,காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரப்பிரசேங்களில் ஓரளவு மழைபெய்யும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.