Vaithilinkap pillai - First remarkable identitiy of Valvettithurai
அபிதா சிந்தாமணி (இந்தியா) என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்திலிருந்து
"வைத்திலிங்கம் பிள்ளை இவரூர் யாழ்பாணத்திலிலுள்ள வல்லிபட்டித்துறை ஆகும். சமயம் சைவம் ஆகும். காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. சிவசம்புப் புலவர் மாணவர். சிந்தாமணி, நிகண்டு முதலியனவும், கந்தரலங்கார முதலிய உரை நூல்களும், சைவ மகத்துவ பாநு, முதலிய கண்டன நூல்களையும் இயற்றியவர்.
சீர்செறிசெஞ்சடைக்கட்டிகழ்மதிப் பிளவு தாங்கும், ஏர் செறி கரிமுகன்றனினைமலரடியை யேந்தி, நேர்செறி இளைஞரோர் சொற் கொருபொரு நேரா யோரப், பார் செறி நிகண்டு சிந்தா மணியெனப் பகர்வனென்றே - என்பது சிந்தாமணி நிகண்டு காப்புச் செய்யுள்".
வல்வெட்டித்துறையில் பிறந்த சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். பாரதி நிலைய முத்திராட்சகசாலை (அச்சகம்) நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878இல் "நிம்பியாகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். "சூரபத்மன்" என்ற நூலுக்கு உரை எழுதினார். "சைவ அபிமானி" என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார்.