யாழிற்கான நீர்த்தேவை – அறிவியல் பூர்வமாக விளக்குகின்றார் சிவகுமார் (காணொளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2017 (வெள்ளிக்கிழமை)
யாழ்பாணம் தற்பொழுது எதிர்நோக்கியுள்ள குடி நீர்த்தேவை இதனை எவ்வாறு கையாள வேண்டும் என காணொளி ஒன்றில் விளக்குகிறார். பேராசிரியர் பொறியிலாளர் திரு. சுப்ரமணியம் சிவகுமார் அவர்கள். தற்பொழுது யாழ் பல்கலைக் கழக கணிதப் பிரிவின் தலமையாளராக (Head of Civil Engineering at faculty of Engineering, University of Jaffna) விளங்கும் சுப்ரமணியம் சிவகுமார் அவர்கள் முன்னர் திட்டமிடல் அதிகாரியாக இருந்தபொழுது பல மில்லியன் ரூபா செலவிலான பல திட்டங்களை வகுத்திருந்தவர். உலகின் பல்வேறு நாடுகளில் நீர் ஆய்வு சம்பந்தமான பல்வேறு கருத்தமர்வுகளில் கலந்து கொண்டவர்.
யாழிற்கான நீர்த் தேவை மற்றும் வன்னி நிலப் பரப்பின் விவசாயம் போன்றவை சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர் நீரில் கலந்துள்ள அரசியல் மற்றும் இடயாலே புகும் (Lateral entry) அரசியல் முறை பற்றியும் குறிப்பிடத் தயங்கவில்லை.
பேராசிரியர் சுப்ரமணியம் சிவகுமார் அவர்கள் வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றார்.
பல நாட்கள் செலவிட்டு அறிந்து கொள்ள வேண்டிய யாழ் நீர்ப் பிரச்சனையை இந்த சிறிய காணொளி ஊடாக இரத்தினச் சுருக்கமாக விளக்குகின்றார் பேராசிரியர் சிவகுமார் அவர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Nandan (United Arab Emirates)
Posted Date: June 10, 2017 at 07:41
Well explained. Well done.
We all have to be together to solve these issues with long term forecast.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.