வல்வை அ.மி.த.கலவன் பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா (மீள் இணைப்பு - படத் தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2019 (திங்கட்கிழமை)
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நேற்று முன்தினம் காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு. செ.தேவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் அவர்கள் கொண்டு கலந்து சிறப்பித்திருந்தார்.
விருந்தினர்களை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டு, மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மானவ்ர்களின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. கலைநிகழ்வுகளின் வரிசையில் சிறார்களின் நடன நிகழ்வுகளும், பேச்சு என பல்வேறுபட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது .
சுமார் 12 .30 மணிவரை நீடித்திருந்த இப்பரிசளிப்பு விழாவில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பரிசளிப்பு விழா நிகழ்வின் படத் தொகுப்பினைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.