திருமலையிலிருந்து வல்வை அம்மன் கோயில் உட்பட வடபகுதிக்கு திருத்தல யாத்திரை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)
வருடந்தோறும் ஆன்மீகவாதி ந.செல்வஜோதி அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆன்மீகத் திருத்தல யாத்திரையானது இந்த வருடம் வட பகுதியை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை மறுதினம் 25 ஆம் திகதி திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி தேவஸ்தான முன்றலில் இருந்து ஆரம்பமாகி முதல் நாள் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலையும் இரண்டாம் நாள் யாழின் நல்லூர் கந்தசாமி கோயில் உட்பட்ட சில கோயில்களை திருத்தல யாத்திரை வந்தடையும்.
இதன் வரிசையில் நான்காம் னால் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன், வல்லிபுர ஆழ்வார், மற்றும் செல்வச் சந்நிதி, நாகர் கோயில் நாகதம்பிரான் ஆகிய கோயில்களை தரிசிப்பர்.
ஐந்தாம் நாள் திருத்தல யாத்திரை குழுவினர் மீண்டும் திருமலை சென்றடைவர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.