ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காம விட்டது சரி என்பது தெளிவாகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“ சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை என்றாலும் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காம விட்டது சரி என்பது தெளிவாகின்றது.
அவருக்கு ஆதரவு தெரிவித்த டக்ளஸ் தேவானந்த உள்ளிட்டோர் முகத்தை எங்கே வைக்க போகிறார்கள். இனியும் அமைச்சரவையில் இருப்பதா என்பதனை அவர் யோசிக்க வேண்டும்.
யுத்தம் முடிந்ததும் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வாக்குறுதி வழங்கியே அவர்களின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.
ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. தற்போது அவரது தம்பி ஜனாதிபதியான நிலையில் அதிகார பகிர்வு வழங்க முடியாது என கூறியுள்ளார். பெரும்பான்மையினர் ஏற்காத எதனையும் செய்ய முடியாது என சொல்கின்றார்.
நாட்டின் அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் அது பெரும்பான்மையானவர்களுக்கே நன்மை. அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
சிறுபான்மையினரை அடக்கியாள ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அதேவேளை எம்மை அடக்கியாள முனையும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
வடமாகாண நிர்வாகங்கள் சரியான முறையில் நடைபெற முடியாது முன்னேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது ஆளுநர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முதலில் அவர் ஆளூநர் ஒருவரை நியமிக்கட்டும்.
வடமாகாணத்திற்கு ஆளுநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் தினறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது பல விடயங்களில் திணறிக்கொண்டு இருக்கின்றார்” என்றார்.(IBC tamil)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.