வல்வை கடற்கரை வீதிக்கு மாவை சேனாதிராஜா 5 மில்லியன் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)
அரசின் வீதி அபிவிருத்தி அமைச்சின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ரூபா 50 லட்ச்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வல்வெட்டித்துறையில் அமைந்து வரும் கடற்கரை வீதியின் ஒரு தொகுதி கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
குறித்த நிதியிலிருந்து ரேவடிப் பகுதியிலிருந்து ஆதிகோவில் வாடி ஒழுங்கை வரையிலான வீதியினை அமைப்பதற்கான வீதித் தடுப்பு அணைகள் மற்றும் வீதி என்பன மேற்கொள்ளப்படவுள்ளன என மேலும் தெரியவருகின்றது.
வீதி மற்றும் வீதித் தடுப்பு அணைகள் இடம்பெறவுள்ள கடற்கரை வீதியின் ஒரு பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.