நெற்கொழு வைரவர் கோயில் நடைபெற்ற பூங்காவனத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2016 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பித்து 19ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெற்றது. மகோற்சவத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் பூங்காவனம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வைரவருக்கு பிற்பகல் விசேட அபிஷேகத்தினைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை பிற்பகல் 4.00 மணிக்கும், பூங்காவனப்பூசை பிற்பகல் 5.00 மணிக்கும் நடைபெற்றது. பூங்கா வனப் பூசையில் சிறப்பு நிகழ்ச்சியாக இசை நிகழ்வுகள் நடைபெற்றன.
நேற்றைய பூங்காவனத் திருவிழாவிற்கான மின்னொளி ஏற்பாடுகளை வல்வை கணபதி மின் அமைப்பாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.