வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், யங்கூன் (ரங்கூன்), மியான்மர் (பர்மாவை) பிறப்பிடமாகவும், நியூஸிலாந்து, வெலிங்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி இராமநாதன் அவர்கள் 02.07.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி, கனகசவுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும், பாரததேவியின்(பாரு) கணவரும், காலம் சென்ற நாராயணசாமி, மஹாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் கௌரி (சிங்கப்பூர்), கிருஷ்ணன் (கனடா), பாகீரதி (நியூஸிலாந்து), அரிகரன் (நியூஸிலாந்து), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேசன்(சிங்கப்பூர்), கரோலின்(கனடா), காலம்சென்ற டேவிட் (நியூஸிலாந்து), ட்ரேசி (நியூஸிலாந்து) ஆகியோரின் மாமனாரும், காயத்திரி, கோகுலன், வித்தியா, ஜஷ்மின், சவானா, குயின்தன், ஈவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் காலம்சென்ற யோகாம்பிகை, காலம்சென்ற பாலாம்பிகை, காலம்சென்ற கோபாலசாமி, காலம்சென்ற ஸ்ரீரங்கநாதன், அருளானந்தசாமி (ஆஸ்திரேலியா), பத்மநாதன் (நியூஸிலாந்து), காலம்சென்ற ஜெயலட்சுஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரனும், இந்திராதேவி (நியூஸிலாந்து), சக்திவேல் (நியூஸிலாந்து), கோகுலு (நியூஸிலாந்து), பூபாலு (நியூஸிலாந்து), ஞானம் (நியூஸிலாந்து) மற்றும் பத்மாசினி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.