மரண அறிவித்தல் - திரு. இராசதுரை செல்வகணேசபிள்ளை (RS)
பொலிகண்டி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும், பருத்தித்துறையில் வசித்தவரும், இல.119/3, முன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை தற்போது வசிப்பிடமாகக் கொண்டவருமான இராசதுரை செல்வகணேசபிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர், முன்னாள் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) அன்று இயற்கை எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசதுரை-அஸ்வதியம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
வசந்தகுமாரியின் பாசமிகு கணவரும்,
வைத்தியகலாநிதி வத்சலன், வாணிஸ்ரீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவரத்தினம், நவமணி, தங்கவேலாயுதம், சீதாலட்சுமி, ஜெகதீஸ்வரநாதன் (சந்திரன்) ஆகியோரின் சகோதரரும்,
வைத்தியகலாநிதி சிவகலாவின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்த்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.