வல்வையில் இடம்பெற்றுவரும் தகவல் தொழில் நுட்ப கற்கைநெறிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) NVQ தகவல் தொழில் நுட்ப கற்கைநெறிகள் (Information communication technology) தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது.
வல்வை மாலுமிகள் சங்க அனுசரணையில் வல்வை நகரசபைக்குச் சொந்தமான பழைய சந்தை கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் குறித்த வகுப்புக்கள் வார நாட்களில் காலை 0900 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெற்று வருகின்றது.
தரம் 4 நிலையில் அமைந்த (NVQ level 4) இந்தக் கற்கை நெறியில் Orientation programme, File and Folders, Word processing, Spread sheet, presentations, Database, Internet and email, Operating system, Network and Trouble shooting, Graphics, Web page design, Software solution ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
21 மாணவர்களே அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த இந்தக் கற்கை நெறியில் வடமராட்சியின் பல பிரதேசங்களைச் சேர்ந்த 21 மாணவ மாணவிகள் தற்பொழுது பயிற்சி பெற்று வருகின்றனர்.
குறித்த கற்கை நெறிக்காக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் இங்கு கணனி ஆய்வு கூடம் ஒன்று அமைக்கப்பட்டு கணனிகள் உட்பட்ட சகல வசைதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
NVQ கற்பிப்போருக்கான தகமை பெற்ற ஒரு ஆசிரியையினால் குறித்த பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
6 மாதங்கள் இடம்பெறும் இந்தப் பயிற்சி நெறி எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடையிவுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக அனுசரணையாளர்களான வல்வை மாலுமிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே புதிய வகுப்பிற்கு சுமார் 30 வரையானோர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.