வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலை ஆரம்பம், வடமராட்சியில் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2017 (சனிக்கிழமை)
நாட்டின் வடபகுதியில் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North East Monsoon) தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. யாழ் வடமராட்சிப் பகுதியின் வல்வெட்டித்துறை உட்பட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணிமுதல் 5 மணி வரை கடும்மழை பெய்துள்ளது.
நாட்டின் வடபகுதியின் பல இடங்களில் நேற்று முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதுடன், வானம் தொடர்ந்தும் மேக மூட்டமாக உள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் ஐப்பசி மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பமாகும் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North east monsoon) ஆனது, தை மாத நடுப்பகுதி வரை நீடிப்பது வழமையாகும்.
சுமார் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியை வருடந்தோறும் பெறும் யாழ் தீபகற்பத்தின் பிராதான நீர்மட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ள வடகீழ் பருவ பெயற்சி காலநிலை மூலமே கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தகது ஆகும். மேலும் யாழ் தீபகற்பத்தின் நீர்த் தேவையின் பிரதான வளமாகவும் இது அமையப்பெற்றுள்ளது.
கீழே படங்களில் வல்வைப் பகுதியில் இன்று பெய்த மழை காரணமாக சிதம்பராக் கல்லூரிக்கு முன்பாக பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதி, மற்றும் சிதம்பரக் கல்லூரி மைதானத்திலும் வெள்ளம் தேங்கியுள்ளதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.