வல்வையின் இயற்றமிழ் போதகாசிரியர் ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் சிந்தாமணி நிகண்டினுடைய 2 ஆவது பதிப்பு தமிழகத்தில் தற்பொழுது பிரசுரமாகி வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை வந்துள்ள சுமார் 15 ற்கு மேற்பட்ட நிகண்டுகளில், சுமார் 3 நிகண்டுகள் இலங்கையர்களால் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இதில் முதலாவதாக இயற்றமிழ் போதகாசிரியர் ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் சிந்தாமணி நிகண்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தற்பொழுது 137 ஆண்டுகளுக்கப் பின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசியர்களான வ.ஜெயதேவன் மற்றும் இரா.பன்னிருகை வடிவேலன் ஆகியோரால் சிந்தாமணி நிகண்டின் 2 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2 ஆவது பதிப்பில், சிந்தாமணி நிகண்டின் பொருள் கூறப்பட்டசொற்கள் அனைத்தும் பயன்பாட்டு வடிவம் கருதி அகராதியாகத் தரப்பட்டுள்ளது.
2 ஆவது பதிப்பை வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர்கள் பற்றி
(பிரசுரிக்கப்படுள்ள புத்தகத்தில் இடம்பெறாத தகவல்கள்)
பேராசிரியர் வ.ஜெயதேவன்அவர்கள்
Professor Emeritus
Department of Tamil Literature
Principal Investigator and Chief Editor
Tamil Lexicon Revision Project
University of Madras
பேராசிரியர் வ.ஜெயதேவன் அவர்கள் தற்பொழுது Madras பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரகராதி மீளாய்வுத் திட்டத்தின் (Tamil Lexicon Revision Project) பிரதான ஆய்வாளராகவும் மற்றும் அதன் தலைமை ஆசிரியராகவும் (Principal Investigator and Chief Editor) உள்ளார்.
Madras பல்கலைக்கழகத்தின் Professor and Head Professor / Department of Tamil Language, President / Faculty of Indian and other Languages, Chairperson / School of Tamil and other Dravidian Languages, Convener, Director/ Publications Division எனப் போன்ற பல்வேறு பொறுப்புக்களில் இருந்து வந்துள்ளார் அல்லது இருந்து வருகின்றார். பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ள இவர் தமிழ் சம்பந்தப்பட்ட பல்வேறு செயற்குழுக்களில் உறுப்பினர் மற்றும் ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார்.
மேலும் தமிழ் நாடு அரசின் தமிழ் சார்ந்த பல்வேறு திட்டங்களிற்கு பொறுப்பாகவும் மற்றும் ஆலோசகராகவும் இருந்துள்ள இவர் தற்பொழுது பிரபல்யமாகவுள்ள தமிழ் இணைய அகராதியான Pals Tamil e. Dictionary Project இதனுடைய Consultant Editor ஆகவும் உள்ளார்.
பல தமிழ் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர் Oxford Senior Learners Dictionary: English-Tamil Project இதனுடைய Editor ஆகவுள்ளார்.
இதுவரை 135 வெளியீடுகளை (Publications) மேற்கொண்டு தற்பொழுது சிந்தாமணி நிகண்டை 136 ஆவதாக வெளியிட்டுள்ளார்.
இவ்வாறாக பல்வேறு தமிழ் மொழி சார்ந்த துறைகளில் இருந்து வருகின்ற பேராசிரியர் ஜெயதேவன் அவர்கள் மாதமிருமுறை வெளிவரும் முதலாவது தமிழ் இணையதளப் புத்தகமான 'தமிழ் கொலை' இதனுடைய Honorary Editor ஆகவும் மற்றும் 'நோக்கு' எனும் பதிப்பகத்தின் Co-editor ஆகவும் மற்றும் சில பதிப்பகங்களில் ஆசிரியராகவும் தொடர்ந்தும் இருந்து வருகின்றார்.
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்
Dr. R. PANNIRUKAIVADIVELAN
Senior Compiler
Tamil Lexicon, University of Madras
Chennai 600 005
தமிழில் MA பட்டம் மற்றும் தமிழ்ப் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ள முனைவர் பன்னிருகை வடிவேலன் அவர்கள் 'தமிழ் மென் பொருள்கள் ஒரு ஆய்வு' மற்றும் 'கணணி வழி நூலடைவு உருவாக்கம்' ஆகியவற்றில் ஆராய்ச்சித் தகுதிகளையும் (Research Qualifications) பெற்றுள்ளார்.
மேலும் Madras பல்கலைக்கழகத்தின், தமிழ் பேரகராதியின் சிரேஸ்ட தொகுப்பாளராகவுள்ள (Senior Compiler-Tamil Lexicon, University of Madras) இவர், பல ஆசிரிய குழுமங்களில் ஆசிரியராக உள்ளதுதுடன், பல சர்வதேச தமிழ்சார் ஆய்வரங்களில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய சிந்தாமணி நிகண்டைப் பெறுவதற்கு பின்வரும் தொடர்புகளில் தொடர்பு கொள்ளலாம்
1) பேராசிரியர் ஜெயதேவன் - vjdevan@rediffmail.com, அல்லது
2) திரு.பன்னிருகை வடிவேலன் - pann1973@gmail.com, அல்லது
3) 'நோக்கு'
259, நேரு நகர் ,
2 ஆவது முதன்மைச் சாலை,
கொட்டிவாக்கம் சென்னை - எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
எமது நன்றியும் வேண்டுகோளும்
வல்வெட்டித்துறையின் இயற்றமிழ் போதகாசிரியர் திரு.ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களை நாம் பலர் அறியும் வண்ணம் இணையத்துக்குள் அகப்படுத்த முயற்சித்து வரும் இவ்வேளையில், இயற்றமிழ் போதகாசிரியரின் சிந்தாமணி நிகண்டை உலகில் உள்ள தமிழர் அனைவரும் அறியும் வண்ணம் இந்தியாவின் தமிழகத்தில் வெளியிட்டு,
வல்வெட்டித்துறைக்கும், வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் பணிக்கும் பெருமை சேர்த்துள்ள பேராசிரியர் ஜெயதேவன் மற்றும் முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன் ஆகியோருக்கு வல்வை மக்கள் சார்பாக எமது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்செய்தியைப் படிக்கும் வல்வை பால் அக்கறை கொண்டுள்ளவர்களும், தமிழ் மொழி பால் அக்கறை கொண்டுள்ளவர்களும் இதனை மற்றவர்களுக்கும் பகிரப் (Share) படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.