ரேவடி கடற்கரை சிரமதானப்பணி நேற்று நடைபெற்றது, ஒவ்வொரு வெள்ளியும் தொடர முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையின் சிரமதானப்பணி நேற்று நடைபெற்றது, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானம் சுமார் 7 மணிவரை நீடித்திருந்தது . பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் பலர் இச்சிரமதானப்பணியில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த சில வாரங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சிரமதானப்பணி பூர்த்தியாகும் வரை, இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடரும் என அறியமுடிகின்றது.
மேற்குறிப்பிட்ட பணமானது கழக அங்கத்தவர்களால், குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் ஒரு சில கழக அங்கத்தவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 250 அடி x 90 அடி அளவில் அமைந்துள்ள இப்புகழ்பூத்த கடற்கரையை மிகவும் பயனுள்ள ஒரு கடற்கரை மைதானமாக மற்றும் கடற்கரைப் பிரதேசமாக மாற்றுவதற்கு ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் மிகக் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இப்பணிகளுக்காக சிலர் சிறு உதவிகளை செய்ய முன்வந்துள்ள போதும், மேலும் கணிசமானளவு நிதி தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.