விக்னேஸ்வரன் வல்வைக்கு விஜயம், வாக்குப் பதிவு நிலையங்களைப் பார்வையிட்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2013 (சனிக்கிழமை)
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட மாகாணசபைத் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் வல்வெட்டித்துறைக்கு விஜயம் செய்திருந்தார்.
சுமார் 10 மணியளவில் வல்வை வந்திருந்த திரு.விக்னேஸ்வரன் அவர்கள் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாக்குப் பதிவு நிலையங்களான வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, வல்வை மகளிர் மகா வித்தியாலயம் போன்றவற்றைப் பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
இவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பிரமுகர்களும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.