வெள்ளம் போல் பக்தர்கள், மிகப் பிரமாண்டமாகவிருந்த வல்லிபுரத்தாழ்வார் சமுத்திர தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2013 (வியாழக்கிழமை)
யாழ்ப்பாணம் வடமாரட்சி பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திர புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவில் சமுத்திர தீர்த்தம் இன்று பிற்பகல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுத்திர தீர்த்தோற்சவத்திற்கான பூசைகள் பிற்பகல் 02.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, மாலை 0400 மணியளவில் விநாயகர், சக்கரத்தாழ்வார், மகாலக்ஷ்மி ஆகியோர் தீர்த்தமாடுவதற்காக வங்கக் கடலுக்கு சென்றடைந்தார்கள்.
கற்கோவளம் கடற்கரையில் இடம்பெற்ற பூஜைகளைத் தொடர்ந்து ஆஞ்சநேஜர் சுவாமிகள் பிற்பகல் சுமார் 0500 மணியளவில் தீர்த்தமாடும் நிகழ்வு இடம்பெற்றது. வல்லிபுரக் கோவிலிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கற்கோவளம் வங்கக்கடல் பகுதியில் இத் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுவாமிகள் சுமார் 07:00 மணியளவில் ஆலயம் திரும்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து சுவாமிகள் வீதி உலா இடம் பெற்றிருந்தது.
பக்தர்கள், தொண்டர்கள், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், தண்ணீர் பந்தல்கள், பல்வேறு வகையான வியாபாரிகள், மின் அலங்காரங்கள், அங்காடிகள், காவல் துறையினர், ஒலிபெருக்கிகள் என கற்கோவளம் கடற்கரைப் பகுதியும், வல்லிபுரக் கோவில் பகுதியும் மிகவும் களை கட்டியிருந்தது. இவ்வேளையில் தவறவிடப்பட்ட குழந்தைகள், குழந்தைகளைத் தவற விட்டவர்கள் என ஒலிபெருக்கிகள் அலறிய வண்ணம் இருந்தன. மக்கள் கூட்டத்துக்கேற்ப பல்வேறு வகையான வியாபாரங்களும் மிகவும் சூடுபிடித் திருந்தன.
அதிகமான மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்கள் என்பவற்றால் இரவு போக்கு வரத்து மிகவும் சிக்கலடைந்திருந்தது.
சமுத்திர தீர்த்சோவத்தின் முழுப் படத்தொகுப்பு மற்றும் காணொளிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் - ஆனை விழுந்தான் வீதி
வந்திருந்த பல்லாயிரக் கணக்கான வாகனங்கள், ஈரூர்திகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள்
வல்லிபுர கோவில் சுற்றாடலில் பக்தர்கள்
கற்கோவளம் கடற்பகுதி செல்லும் பக்தர்கள்
தண்ணீர் பந்தல்
எஞ்சியுள்ள மணல் குன்று
அருகிவரும் பட்டுப்புளி வியாபாரம்
வல்லிபுரக் கோவில் மணல்
சமுத்திர தீர்த்சோவ கற்கோவள கடற்பகுதி
எண்ணிலடங்கா பக்தர்கள்
கடலில் வட்டமிடும் படகுகள்
சோடா வியாபாரத்தில் ஈடுபடும் பெரும்பான்மையினர்
தீர்த்த மாடிய பின் சுவாமிகள் - கற்கோவள கடற்பகுதி
சுவாமிகளைக் கொண்டு ஓடிய தொண்டர்கள்
கற்கோவளம் பகுதியிலிருந்து வந்த வாகனங்கள்
கற்கோவளம் கடற்பகுதியிலிருந்து திரும்பும் பக்தர்கள்
தீர்த்த மாடிய பின் சுவாமிகள் - வல்லிபுர ஆலய வீதி
சுவாமி உலா
திருவிழாவின் ஓர் அங்கமான ஐஸ் கிரீம் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.