கெருடாவில் மாயவர் ஆலய சமுத்திரத் தீர்த்தோற்சவம் இன்று ஊறணிதீர்த்தக் கடலில் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2013 (வியாழக்கிழமை)
கெருடாவில் மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு மாயவர் ஊறணி தீர்த்தக் கடலில் தீர்த்தமாடினார். இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாயவர் மயிலியதனை, ஊரிக்காடு, வல்வெட்டித்துறை சந்தி வீதியூடாக ஊறணி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினார்.
அங்கு விசேடமாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கடலில் தீர்த்தமாடியபின் மீண்டும் மாயவர் ஆலயத்திற்கு எழுந்தருளினார். கெருடாவில் மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவமானது கடந்த 4 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் மாயவர் ஆலயமானது வல்வெட்டித்துறையை அண்டியுள்ள ஒரேயொரு ஆலயமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.