வடமராட்சியின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் பருத்தித்துறையில் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2013 (வியாழக்கிழமை)
எதிர்வரும் 21 ஆம் திகதி, அதாவது நாளை மறுதினம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றது.
பருத்தித்துறை சென் தோமஸ் தேவாலயத்தை அண்டிய கடற்கரைப் பகுதியில், சுமார் 08:00 மணியளவில் ஆரம்பித்திருந்த கூட்டம் இரவு 11:00 மணிவரை நீடித்திருந்தது.
இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சம்பந்தன், முதன்மை வேட்பாளர் திரு.சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களில் ஒருவரான திரு.M.K.சிவாஜிலிங்கம், அனந்தி எழிலன் உட்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.