எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று தொண்டைமானாற்றில் இன்று மதியம் நடைபெற்றது.
இன்று மதியம் 12:30 மணியளவில், தொண்டைமானாறு பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களில் ஒருவரான திரு.M.K.சிவாஜிலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் யாழ் வர்த்தகர் சங்கத் தலைவருமான திரு.ஜெய்சேகரம் மற்றும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளர் செல்வன் தர்சானந்தன், வல்வை நகரசபை உபதலைவர் திரு.சதிஸ் உட்பட்ட பலர் கூட்டமைப்பினைப் பிரதிநிதிப்படுத்தியிருந்தனர்.
பிரச்சாரக் கூட்டத்தில் திரு.M.K.சிவாஜிலிங்கம், திரு.ஜெய்சேகரம், மற்றும் செல்வன் தர்சானந்தன் உட்பட்ட சிலர் உரை நிகழ்த்தியிருந்தனர். சுமார் 02:30 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் யாழ் வர்த்தகர் சங்கத் தலைவருமான திரு.ஜெய்சேகரம் அவர்கள் தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.