கொழும்பு பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று காலை சுமார் 07:30 மணியளவில் வசந்த மண்டைப் பூசை இடம்பெற்றது. இதன் பின்னர் சுவாமி தேரினிலே காலி வீதி வழியாக, தற்பொழுது (13:00 மணி) கொழும்பு, வெள்ளவத்தையை வந்தடைந்துள்ளது.
பிற்பகல் 02:00 மணியளவில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண இடத்தை வந்தடைந்து, அங்கிருந்து காலி வீதி வழியாக, பம்பலப்பிட்டிய டிக்மன் வீதி, டூப்ளிகேசன் வீதி மற்றும் சென் லோறன்ஸ் வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை இன்று இரவு 09:00 மணியளவில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.