சிதம்பரா கல்லூரி ஆராதனை மண்டபத்தை புனரமைக்க Children's Well-wishers Network (CWN) முன்வந்துள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2013 (புதன்கிழமை)
பல தசாப்த காலமாக சிதைந்திருந்த கல்லூரியின் பிரதான மாடி கட்டிடத்தை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகத்தினால் பல முறை கோரிக்கை விடப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் புதிய கழிப்பறைகளை மிகவும் குறுகிய காலபகுதியில் நிர்மாணித்த CWN, இவ்வேலைத்திட்டத்தை சிதம்பரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினூடாக நிறைவேற்றும் என்று திரு. ராஜேந்திரா (மாஸ்டர்) அவர்கள் அறிவித்துள்ளார்.
விஞ்ஞான கருத்தரங்குகள் நடத்தக் கூடிய தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றோடமுள்ள ஆராதனை மண்டபமாக இது திருத்தியமைக்கபடவுள்ளது. லண்டனில் இருந்து 'Multimedia projector and mounting kit' ஏற்கனவே தருவிக்கபட்டுள்ளது.
முப்பது வருடங்களுக்கு முன்பு கணித விஞ்ஞான தொழில்நுட்ப கண்காட்சிகள், விஞ்ஞான குறும்படங்கள் இந்த ஆராதனை மண்டபத்தில் காண்பிக்கபட்டது. வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு மாணவர்களை தயார்படுத்துமுகமாக ஆராதனை மண்டபம் அமைக்கப்படும். மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் மிகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஓர் முன்மாதிரியாக இது விளங்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mohanathas Kandasamy (Sri Lanka)
Posted Date: September 01, 2013 at 05:40
எங்களூர் மாணவர்கள் மட்டும் இந்த ஆபத்தான கட்டிடத்தில் கல்வி கற்க வேண்டுமா? வேறு எந்த ஊரிலும் இவ்வளவு சிதைந்த பாடசாலை கட்டடங்கள் இல்லை. இன்னும் எத்தனை வருடங்கள் எங்கள் பிள்ளைகள் ஆபத்தான சூழ்நிலையில் படிக்க வேண்டும்? ஒரு நல்ல விடயம் நடக்கின்றபோது விமல், நகுலன், வெற்றி போன்று எத்தனை பேர் எங்கிருந்துதான் கிளம்புகிறார்களோ தெரியவில்லை.
Vetti (UK)
Posted Date: August 30, 2013 at 19:53
வல்வையர் என்றால் தாயகத்துக்காக உயிரை விடுபவர்கள். ஆனால் இங்கு வேற்றூர் சிறார்களின் பணத்தில் எமது கல்லூரிக்கு மண்டபம். வெட்கமாக உள்ளது.வல்வையர் மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் எடுத்து அல்ல.இதை புரிந்து கொண்டு சுவாமி Rajendra நல்ல முடிவு எடுப்பார்?
Swami Rajendra (UK)
Posted Date: August 30, 2013 at 19:32
அன்பான வல்வை மக்களே
உங்களை ஏமாற்ற வெளியிலுருந்து யாரும் வரத் தேயில்லை. கால காலமாக தமிழனை, வல்வையை அழிப்பவர்கள் எம்மிடையே தான் இருக்கிறார்கள்.
இவர்கள் ஆடிய நாடகங்களால் - போலித்தன அரசியல் கூத்துக்களால் - கண்கட்டு ஜால விழாக்களால் - குறிச்சி வாத நோய்களால் - சீட்டு போன்ற பண மோசடிகளால் - ஆள்கடத்தல் போன்ற அரசாங்கத்திற்கு எதிரான வேலைகளால் - கற்பழிப்பு கொலை காமம் போன்ற செயல்களால் - களவாடிய பொழுதுகள் அநேகம் அநேகம்.
யார் குதிரை விடுகிறார்கள் ? யார் பொய் சொல்லுகிறார்கள்? யார் யார் மற்ற ஊர் மக்களின் பணத்தை மோசடி செய்கிறார்கள் ?
விளக்கம் வேணுமா விமல்? நயவஞ்சக நாடகமாடுவது யார் நகுலன்?
வல்வைக்காக மேலும் சொல்லாமல் விடுகிறேன் .
கணிதப் போட்டி 2013 பொருத்தவரை :
£970 இணை சூறையாடியது உனது நண்பர்கள். மக்களிடமிருந்து £14000 பெற்றது என்று யாருக்கு குடுமி சுத்துகிராய் விமல்? £2000 ஐ இழந்தோம் உனது நண்பர்களின் அயோக்கியத்தனத்தால். மேலும் போட்டிக்காக, எனது குடும்பம் ஆயிரக்கணக்காக செலவழித்தது தெரியுமா நண்பரே?
ஏமாற்றப்பட்ட வெளியூர் செல்வங்களுக்கு இலவச கணிதப்போட்டி 2014 காத்திருக்கிறது. இவர்கள் உங்களுக்கு குப்பிகள் தூக்கணும். நீங்கள் குறிச்சி வாதம் பேசி, பேச்சுக்கு தமிழர் பெயர் சொல்லி ஊரையும் உலகையும் ஏமாற்றணும், உங்கள் பணப் பேட்டிகள் நிரம்ப, நிரப்ப (இப்ப பணப் பெட்டிகள் யாரிடம் இருக்கு என்று யாருக்கும் தெரியாது. - அற வட்டியில் கிடக்கா? அவர் அவரது வியாபாரத்தில் கிடக்கா யாருக்கும் தெரியாது)
எல்லா உண்ணிகளின் உண்மைகளும் ஊருக்கு வெளியில் வந்தால் வல்வைக்கு நன்மையா நண்பரே?
உங்கள் கொலை மிரட்டல்கள் உண்மையை வெளிப்பட்டுதுகிறது. மக்களே அதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
முப்பது வருடங்களாக சிதைந்து போயுள்ள வல்வெட்டித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒரே ஒரு விஞ்ஞான பாடசாலை அபிவிருத்தி முக்கியமே தவிர லண்டனில் விழாகளும் தங்கபதகங்களும் அதன் பின்பு நடாத்தலாம். எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட சிதம்பரா கல்லூரியை மாஸ்டர் துணிச்சலுடன் அபிவிருத்தி செய்வது மிகவும் வரவேட்கதக்கது. 7 -7 - 2012 நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆரம்பிக்கபட்ட CWN நிகழ்ச்சி நிரலில் ஆராதனை மண்டப புனரமைப்பு முக்கியமானதாகும்.
vimal (uk)
Posted Date: August 29, 2013 at 05:40
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு என்ற பெயரில் இந்த வருடம் நடாத்தப்பட்ட கணிதப் போட்டியினால் சேகரிக்கப் பட்ட 14000 இங்கிலாந்து பவுண்களை அபகரித்து அவர்களது விழாவினை தடை செய்து, பரீட்சையிற்கு தோன்றிய மாணவர்களை ஏமாற்றி மாஸ்டர் சுவாமியின் சிறுவர் வலையமைப்பு ஏன் யாரின் மேலேயும் குதிரை விடுகிறது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.