அவுஸ்திரேலியா உள்ள வல்வை நலன்புரிச்சங்கம், வல்வெட்டித்துறை சென் செபஸ்தியர் தேவாலய புனரமைப்பு வேலைகளுக்கென இலங்கை ரூபா 3000,000/- நிதியுதவியினை அளித்துள்ளனர். இது சம்பந்தமாக PM Foundation நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு.
அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்துக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
வல்வை சென்.செபஸ்தியர் தேவாலய திருத்த வேலைகளுக்கென நிதி உதவிகளை
செய்து தரும்படி, உலகில் உள்ள அனைத்து வல்வை நலன்புரிச் சங்கங்களுக்கும்,
வல்வை மக்களுக்கும் அறிவித்திருந்தோம் .
இந்தவகையில் எமக்கு உறுதியளித்தபடி கடந்த வாரத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வல்வை நலன்புரிச் சங்கம் தமது நிதியாக, ரூபாய் மூன்று லட்சத்தை (300,000/=) தேவாலய நிர்வாகத்திடம் நேரடியாக கையளித்துள்ளார்கள்.
இவர்களைப்போலவே, சுவிஸ் வல்வை ஒன்றியம் மற்றும் நலன் விரும்பிகள் பலரும்
தனித்தனியாக தமது நிதி உதவிகளை செய்திருந்தார்கள் என்பதை சில வாரங்களுக்கு
முன்பாக உங்களுக்கு அறியத்தந்திருந்தோம்.
இவர்களின் விபரங்களை மீண்டும் உங்களுக்கு அறியத்தருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.